திருவாதவூர் தேனீ வாழ்க்கையும் அற்புதங்களும்
திருவாதவூரர்க்கு வயது ஏற ஏறக் கலைஞானங்களும் நிரம்பின. பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இவரது கல்வித் திறத்தையும் நல்லொழுக்கத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் என்பவன் ஆவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் அவரைத் தனது அவைக்கு அழைத்து அளவளாவி, அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும் இது இறைவனுடைய ஆணையென்று எண்ணி அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை மிகக் கவனத்தோடு இயற்றி வந்தார். கீழைத்துறைமுகத்தில் அராபியக் குதிரைகளுடன் மரக்கலங்கள் வந்திருப்பதை அறிந்த பாண்டிய மன்னன், குதிரைகளை வாங்கி வரும் பணியை திருவாதவூரரிடம் ஒப்படைத்தார். அவரும் குதிரை வாங்கும் பொருட்டு பரிவாரங்களுடன் செல்லும் வழியில் திருப்பெருந்துறையை அடைந்தார். அவ்விடத்தை நெருங்கும் பொழுது வாதவூரர் உலக பந்தங்கள் அறுந்து ஆன்மீக நாட்டம் மிகுதியுற்றதை உணர்ந்தார். மேலும் செல்லும் பொழுது குருந்தமர நிழலில் குருநா