ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி
இன்று சித்திரை திருவாதிரை. ஒரு அற்புதமான நன்னாள். சைவம்,வைணவம் என்று நாம் கொண்டாடவேண்டிய திருநாள். நமக்கு இந்த பாகுபாடு கிடையாது. சைவத்திற்கென விறன் மிண்ட நாயனார் பூசையும், வைணவத்திற்கென ராமானுஜரின் பூசையும் இன்று தான். குருமார்களை உருவமாக பார்த்தால் நமக்கு பல பேதங்கள் ஏற்படும். அவர்களின் சூட்சும சரீரம் பாருங்கள். பின்னர் நீங்களே குருவின் நிலையை பற்றிக் கொள்வீர்கள்.இந்நாளில் ராமானுஜரின் திவ்ய சரிதத்தை பாற்கடலில் சிறு துளியை பருகிய பூனையைப் போல் தருகின்றோம். இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொ