ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் துதி
ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் துதி கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்ன சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகன் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் முருகன் துதிகளை சொல்லுங்கள். கந்தவேள் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி! சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி! மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி! ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி! திங்கட்கிழமை துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி! சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி! சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி! திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி! செவ்வாய்க்கிழமை செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய் எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண